ஆப்கானிஸ்தானில், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு பகுதியில் உள்ள நிம்ருஸ் மாகாணத்தில், தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து, ஆப்கானிஸ்தான் வான்படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன்போது குண்டுகள் இலக்குத் தவறி, குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 அப்பாவி பொதுமக்கள் 15 உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.