லடாக் எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவ வீரர், இன்று காலை சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் இந்திய பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த சீன இராணுவ வீரர் ஒருவர் கடந்த 8ஆம் நாள் காலையில் இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, அவர் உயர் இராணுவ அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அவரை சீனாவிடம் திரும்ப ஒப்படைக்க இந்தியா நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய, இன்று காலை 10.10 மணியளவில், சீன இராணுவ அதிகாரிகளிடம், சீன இராணுவ வீரர், திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று, இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.