இந்தோனேசியாவில், பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பலத்த மழையால் மேற்கு ஜாவா மாகாணத்தில், சுமேடங் மாவட்டத்தில் உள்ள சிஹான்ஜிவாங் கிராமத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வந்த நிலையில், இன்று 2-வது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில். மீட்புகுழுவினர் சிலரும் அடங்குவதாக கூறப்படுகிறது.
நிலச்சரிவால் வீதிகள், பாலங்களில் மண் சரிந்து கிடக்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு கருவிகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.