இந்திய பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த தமது இராணுவ வீரரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்தியாவிடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
லடாக் எல்லையில், சீன இராணுவ வீரர் ஒருவர் எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்த போது, இந்திய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமது வீரர் இருட்டின் காரணமாகவும், பூகோள அமைப்பு பிரச்சினையினாலும் வழி தவறி இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டார் என்று சீனா தெரிவித்துள்ளது.
அவரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், தேவையற்ற காலதாமதம் சர்ச்சையை ஏற்படுத்தி விடும் என்றும், சீனா கூறியுள்ளது.
தமது வீரர் காணாமல் போனது, பற்றி இந்தியாவுக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் தான், அவரை பிடித்து வைத்திருப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.