கடந்த 24 மணித்தியாலங்களில் கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 117 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், புதிதாக 7 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கனடாவில், இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 60 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், 16 ஆயிரத்து 950 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, 84 ஆயிரத்து 567 பேர் தொற்றுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்றும், இவர்களின் 843பேர், திவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சுகாதாரத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.