கியூபெக்கில் இரவுநேர ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அங்கு காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சனிக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் கியூபெக்கில் இரவுநேர ஊடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
அதிகாலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும் இந்த ஊரடங்குச் சட்டம், அடுத்த நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வகையில் அதிகளவு காவல்துறையினர் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய வாகனங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, இரவு நேர ஊரடங்குச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இடங்களில் நேற்றிரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் செய்த குறைந்தது 12 பேரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களுக்கு 1500 டொலர் அபராதம் விதித்துள்ளனர்.