கியூபெக்கில் இரவுநேர ஊரடங்குச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிகளவில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதிகரித்துள்ள கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, கியூபெக்கில், சனிக்கிழமை இரவு தொடக்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்குச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரண்டாவது நாளாகவும் இத்தகைய போராட்டங்கள் இடம்பெற்றாக மொன்ட்றியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 20 இடங்களில் இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர.
கியூபெக் சிற்றியில் நேற்றிரவு சுமார் 20 பேர்வரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஊரடங்கை மீறுவோருக்கு 1000 டொலர் தொடக்கம், 6000 டொலர் வரையான அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.