தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி, வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில், இன்று பொங்கல் விசேட பூசை வழிபாடு இடம்பெற்றுள்ளது.
தைப்பொங்கலுக்கு முன்னர் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கும் வகையில், சிவில் சமூகத்தின் ஏற்ப்பாட்டில் சர்வமதப் பிரார்த்தனை வாரம் கடந்த 7ஆம் நாள்யில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில், விசேட பொங்கல் பூசை வழிபாட்டு இடம்பெற்றுள்ளது.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.