தாய்வானுடனான தூதரக தொடர்புகள் மீதான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனா- அமெரிக்கா இடையே இணக்கமான சூழல் இருந்த போது, தாய்வான் – அமெரிக்க தூதரக அதிகாரிகள் இடையிலான தகவல் தொடர்புக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ( mike pompeo) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தாய்வான் ஒரு துடிப்பான நம்பகமான அமெரிக்காவின் கூட்டாளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.