பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை வழங்கி வந்த ஒருவரை, ராஜஸ்தானில் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர், பாகிஸ்தான் உளவு அமைப்பின் முகவருடன், தொடர்பில் இருந்து கொண்டு இந்திய இராணுவம் தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநில குற்றப் புலனாய்வு காவல்துறையினர், இவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தான் முகவருடன் இராணுவ தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.