ரிக்ரே (Tigray) மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியமான தலைவரும், அதன் ஆரம்ப கால உறுப்பினருமான ஒருவரைக் கைது செய்துள்ளதாக எதியோப்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
செப்ஹட் நெகா (Sebhat Nega) என அழைக்கப்படும், 80 வயதுடைய, குறித்த தலைவர் ரிக்ரே மாகாணத்தின் ஒதுக்குப் புறமான இடமொன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என எதியோப்பிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ரிக்ரே பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரிக்ரே (Tigray) மக்கள் விடுதலை முன்னணியிடம் இருந்து எதியோப்பிய அரசாங்கம், கடந்த நொவம்பர் மாதம், இராணுவ நடவடிக்கை மூலம் மீளக் கைப்பற்றியது.
அதேவேளை, ரிக்ரே (Tigray) மக்கள் விடுதலை முன்னணியின் ஏனைய முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எதியோப்பிய இராணுவம் தெரிவித்துள்ளது.