இந்தோனேசியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் இருந்து நேற்று புறப்பட்ட விமானம், ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில், 62 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
‘இந்தோனேசியாவில் எதிர்பாராத விதமாக நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், இந்த துக்கமான நேரத்தில் இந்தோனேசியாவுடன் இந்தியா துணைநிற்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.