ஸ்பெயினை தாக்கிய மோசமான பனி புயலினால், இதுவரை 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெய்னில், நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கியுள்ளது.
பிலோமெனா (Filomena) என்று பெயரிடப்பட்ட இந்த புயல், தலைநகர் மட்ரிட் (Madrid) மற்றும் ஸ்பெயினின் மத்திய பகுதிகளில் கடும், பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு, மோசமான இந்தப் பனிப்பொழிவினால், வீதிகளில் வாகனங்கள் நகர முடியாமல் சிக்கியுள்ளன.
மட்ரிட் வானூர்தி நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பனி புயலுக்கு, இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.