கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை மொத்தமாக 17ஆயிரத்து 86பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 892பேர் பாதிக்கப்பட்டதோடு 136பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஆறு இலட்சத்து 68ஆயிரத்து 181பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 82ஆயிரத்து 522பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 843பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.