சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசநாயக்கவுக்கும், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமைச்சர்கள் தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, இன்று இராஜாங்க அமைச்சர் விமலவீர திசநாயக்கவுக்கும், தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில், 32 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்,ஏ.சுமந்திரன், சாணயக்கியன் ஆகியோரும் அடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்,ஏ.சுமந்திரனுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும், அடுத்த சில நாட்களில் இரண்டாவது பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் சுமந்திரன், அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதான அறிவிப்பு, யாழ்ப்பாணம் காவல்நிலைய பொறுப்பதிகாரியினால், ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.