நிலச்சீரழிப்பை தடுக்கும் வகையிலான சுற்றுச்சூல் திட்டத்திற்கு 55மில்லியன் டொலர்கள் உதவி அளிக்கப்படும் என்றும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த திட்டத்திற்கு, தமது அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் கூறினார்.
மெய்நிகர் வழியாக நடைபெற்ற பல்லுயிர் உச்சிமாநாட்டில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், இந்த செயற்றிட்டம் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானதொன்றாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்