கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது, என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இன்று மாலை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், “ தடுப்பூசி குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்.
தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான வாய்ப்பு வரும் போது, அரசியல்வாதிகள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.