மூன்று தசாப்தங்களாக இராஜதந்திரப் பணிகளில் ஈடுபட்ட, வில்லியம் பேர்ண்ஸ் (William Burns), அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளார்.
33 ஆண்டுகள் இராஜதந்திரப் பணிகளில் ஈடுபட்ட இவர், ரஷ்யாவுக்கான தூதுவராகவும், ஒபாமா நிர்வாகத்தில், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பேச்சுக்களிலும் பங்காற்றியிருந்தார்.
உதவி இராஜாங்கச் செயலராக இருந்து 2014இல் ஓய்வுபெற்ற வில்லியம் பேர்ன்ஸ் (William Burns), தற்போது, சர்வதேச அமைதிக்கான, சிந்தனைக் குழாம் ஒன்றின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
சிஐஏயின் தலைவராக நியமிக்கப்படும் முதலாவது இராஜதந்திரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.