இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூதக் குடியேற்றவாசிகளுக்காக சுமார் 800 சட்டவிரோத வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியிலிருந்து வெளியேற்றப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போலல்லாமல், கடந்த காலங்களில் இஸ்ரேலிய சட்டவிரோத தீர்வுக் கொள்கைகளை விமர்சித்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்புக்கு முன்னதாக திங்களன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யூதேயா மற்றும் சமாரியாவில் நூற்றுக்கணக்கான வீடுகளை நிர்மாணிக்க பிரதமர் உத்தரவிட்டதாக நெத்தன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் கட்டுமானத்திற்கான ஆரம்பத் திகதி வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.