பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாறவுள்ளதோடு அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்க உள்ளனர்.
அமைச்சர் நவ்தீப் பைனஸ் (Navdeep Pinus) அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயின், (Francois Philippe Champagne) பைனஸ் (Pinus) வகித்த கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சை ஏற்க உள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் மார்க் கன்ரூ (Mark Conroe) புதிய வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் புதிய போக்குவரத்துத்துறை அமைச்சராக ஒமர் அலகப்ரா (Omar Alagabra) பதவி ஏற்க உள்ளார்.
இந்த மாற்றங்களின் பின்னர் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் மெய்நிகர் வழியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் நிதியமைச்சர் பில் மொர்னோ (bill Monroe) பதவி விலகிய பின்னர் நிதியமைச்சராக கிறிஸ்டியா பிரீலேண்ட் (Christia Freeland) பதவி ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.