கனடா,அமெரிக்கா இடையேயான நிலவழிப் போக்குவரத்துக்கான மட்டுப்பாடுகள் எதிர்வரும் மாதம் 21ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் (Bill Blair) இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
கொரோனா பரவலை தடுப்பதற்கான சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வழமைபோன்ற அத்தியாவசியப் போக்குவரத்துகளுக்காக அமெரிக்க, கனடிய எல்லை பாதுகாப்பு தரப்பினரின் அனுமதியுடன் போக்குவரத்துக்கள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.