உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றுடன் பிரித்தானியாவில் இருந்து வந்த ஒருவர், சிறிலங்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வந்திருக்கக் கூடும் என்று நம்பப்படும் ஒருவரே, இந்த புதிய வகை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.