தோல்வியை ஒப்புக்கொள்ளாத அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், பா.ஜ.கவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில முதல்வர். மம்தா பானர்ஜி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நடியாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும், பா.ஜ.க வுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
தேர்தலில் தோற்ற பின்னரும் வெற்றி பெற்று விட்டதாக ட்ரம்ப் கூறுகிறார்.
அதுபோல் பா.ஜ.கவும் தனது தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை.
வேளாண் சட்டத்தை எதிர்த்து டில்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அவர்கள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது. ” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.