மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அமுல்படுத்த தடைவிதித்துள்ள உச்சநீதிமன்றம், ,இந்தப் பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்படவுள்ளதாகவும், தெரிவித்துள்ளது.
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், தொடரப்பட்டிருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே உச்சநீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வேளாண் சட்டங்கள் செல்லுபடியாகுமா? என்பது குறித்தும், போராட்டத்தால் மக்களின் உயிரை பாதுகாப்பது, மக்களின் உடைமைகளை பாதுகாப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.
இந்த சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழு அமைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.
இந்த குழு எந்த உத்தரவோ தண்டனையோ விதிக்காது. அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கும்.
எனவே, மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமுல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.” என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.