இரண்டு தாதியர்கள் அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்று திரும்பியமையை ஒன்ராரியோ தாதியர் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச முன்கள தாதியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர்கள் அங்கு சென்று திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசியமற்ற பயணங்களுக்கான தடைகள் அமுலில் இருக்கின்றபோதும், தாதியர்கள் வெளிநாடு சென்று வந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப்பயணங்களுக்கான அனுமதிகள் எவ்வாறு வழங்கப்பட்டமை உள்ளிட்ட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.