நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளால் ஹரினுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் கூட அந்த பழியை ஜனாதிபதியின் மீது சுமத்திவிடக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகக் கூறியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.