உகண்டாவில் ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில், முகநூல் , வாட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களுக்கும், அரசு தடை விதித்துள்ளது.
உகண்டாவில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி யோவெரி முசெவெனிக்கு, (Yoweri Museveni) எதிர்கட்சித் தலைவர் பொபி வைன் ( Bobi Wine) கடும் சவாலாக உருவாகியுள்ளார்.
சனத்தொகையில் அதிகமானவர்களான இளைஞர்கள், பிரபல பொப் பாடகராக 38 வயதுடைய பொபி வைனை ‘புதிய உகாண்டா’ என்ற பிரசாரத்துடன் பின்தொடர்கின்றனர்.
இந்தநிலையில் மறுஅறிவிப்பு வரும் வரை முகநூல் போன்ற சமூக ஊடகங்கள், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளை அரசாங்கம் தடை செய்துள்ளது.
உகண்டாவில் உள்ள தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், பொபி வைன் தனது பிரச்சாரங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பை முகநூல் மூலமே நேரடியாக ஒளிபரப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.