உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றுடன் சிறிலங்காவுக்கு வந்தவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா அணியுடனான போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த 3ஆம் நாள், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மத்தல வானூர்தி நிலையத்தில் வந்திறங்கியிருந்தது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர், வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் பரவியுள்ள உருமாறிய வைரஸ் தொற்றினால் மொயின் அலி பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.