டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் இந்தாண்டு குறைந்த அளவே இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி வழக்கமாக திரட்டப்படும் மாணவர்கள், நாட்டுப் புறக் கலைஞர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் 321 பாடசாலை மாணவர் மாணவிகளும் கலாச்சார நிகழ்ச்சிகளில் 80 நாட்டுப்புறக் கலைஞர்களும் மட்டும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அணிவகுப்பில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்துக் கொண்ட நிலையில் கொரோனா பீதியால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.