சமாதானத்துடனும் பாதுகாப்புடனும் அதிகாரத்தை கைமாற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அவருக்கெதிரான குற்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானத்திற்குள்ளாகியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக செனட் சபை கூட வாய்ப்பில்லை என்பதால் ட்ரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க முடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.