யுடியூப் அலைவரிசைகளில், ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெசன்ட் நகர் கடற்கரை சென்ற பெண்களிடம், ஆபாசமாக கேள்வி கேட்டு, பதில் கூற மறுத்த பெண்களை துரத்தி சென்று படம்பிடித்து ஒளிபரப்பிய, ‘சென்னை ரோக்’ யு டியூப் அலைவரிசை உரிமையாளர் தினேஷ்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஜய்பாபு, ஒளிப்பதிவாளர் அசேன் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், யுடியூப் அலைவரிசைகளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், யுடியூப் அலைவரிசைகளையும், அவற்றின் காணொளிகளையும் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.