தமிழகத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தின் அவனியாபுரத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அனைவரும் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது.
முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் மற்ற காளைகள் ஒவ்வொன்றாக களத்தில் இறக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன