கனடாவில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு நிகழ்வுகள் இன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கனடா தமிழ் மரபியல் நடுவத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் யாவும் மெய்நிகர் வாயிலாக நடைபெறவுள்ளது. கொரோனா தீவிரத்தன்மையை எட்டியுள்ள நிலையில் ஒன்ராரியோ முழுவதும் விசேட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இம்முறை பொங்கல் விழா உள்ளிட்ட அனைத்தையும் மெய்நிகர் வாயிலான மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கனடா தமிழ் மரபியல் நடுவத்தின் உத்தியோக பூர்வமான முகநூல் பக்கம் மற்றும், யூடியூப் ஆகியவற்றில் இந்த நிகழ்வுகளைக் நேரலையாக காண முடியும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.