தை திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மங்களகரமான வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், கலைகள், பண்டிகைகள் ஆகியவற்றை பாதுகாத்திட தீர்மானம் எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், இந்த பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும். உழவர்கள் மகிழட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், விவசாயிகளின் வாழ்வு செழித்திடும் வகையில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன், நகைக் கடன், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று குறிப்பிட்டுள்ள மோடி தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.