நாடளாவிய ரீதியில் வாரமொன்றுக்கு தலா 2.5மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடகமாக அமைக்கப்பட்டு வெளிநோயார் பிரிவுகளின் ஊடாகவும் அதிகளவு தடுப்பூசி போடும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மீளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தடுப்பூசிக்கான பற்றாக்குறை தொடர்பில் எவ்விதமான அச்சமும் பொதுமக்கள் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.