விமானப்படைக்கு, 48 ஆயிரம் கோடி ரூபா செலவில், 83 இலகு ரக போர்விமானங்கள் வாங்குவதற்கு, இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விமானப்படைக்காக 45 ஆயிரத்து 696 கோடி ரூபா செலவில், நான்காம் தலைமுறையை சேர்ந்த 73 தேஜாஸ் எம்.கே.1 ஏ ரக இலகு ரக போர்விமானங்களையும், 10 தேஜாஸ் எம்.கே.1 ரக போர்விமானங்களையும், கொள்வனவு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ஆயிரத்து202 கோடி ரூபாவும், ராணுவ திட்டங்களுக்கு 48 ஆயிரத்து 696 கோடி ரூபாவும், ஒதுக்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.