ஒன்றாரியோ மாகாணத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு மாகாண அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலைபேசிச் சாதனங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் மூலம் அவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உணவு, சுகாதாரம், உடற்பயிற்சி அல்லது வேலை போன்ற அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள். இது சட்டமாகும். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அத்தியவசியக் கடைகள், மருந்தகங்கள், எரிவாயு நிலையங்கள் மற்றும் விநியோகிக்கும் உணவகங்கள் இந்த புதிய விதிகளால் பாதிக்கப்படாது. இருப்பினும், மது, சில்லறை விற்பனையாளர்கள் போன்ற அத்தியாவசியமற்ற கடைகளை இரவு 8 மணிக்குள் மூட வேண்டிய கட்டாயம்
அத்துடன் தேவைப்படும்போது மட்டுமே வீட்டை விட்டு வெளியேறவும், முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யவும் குடியிருப்பாளர்கள் மீள நினைவூட்டப்படுகிறார்கள் என்றும் அதில் உள்ளது.