எந்தவொரு வல்லரசு நாடும் இந்தியாவின் சுயமரியாதையை தீண்டினால், உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் போரை விரும்பவில்லை, அனைவரினதும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.
எந்தவொரு வல்லரசும் எங்களது சுயமரியாதையை புண்படுத்த விரும்பினால், எங்கள் வீரர்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள்.
இது எமது இரத்தத்திலும் கலாச்சாரத்திலும் இருப்பதால் மற்ற நாடுகளுடன் அமைதியான மற்றும் நட்பான உறவை இந்தியா விரும்புகிறது.” என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.