இந்தோனேசியாவின் சுலெவெசியை (Sulawesi) தாக்கிய பூகம்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
மஜேன் (Majen) என்ற பகுதியிலும் அதன் அருகில் உள்ள மமுஜூ என்ற பகுதியிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கையும் மீட்பு பணிகளும் தொடர்ந்து இடம்பெறுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மஜேனில் (Majen) 637 பேரும் மமுஜூவில் 25 பேரும் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்