சபரிமலை ஐயப்பன் கோவிலில், இன்று மாலை, மகர விளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் இடம்பெற்றுள்ளது.
மகரசங்கராந்தி தினமான இன்று ஐயப்பன் கோவிலில் மகாதீபாராதனை நடைபெற்று முடிந்ததும், மாலை 6.30 மணியளவில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகர ஜோதி தென்பட்டது.
ஜோதி வடிவமாக காட்சியளித்த ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொரோனா தொற்று நெருக்கடிகளால், இம்முறை சபரிமலைக்கு குறைந்தளவு பக்தர்களை வருகை தந்திருந்தனர்.