ஒன்ராரியோவில் இணைவழி கற்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒன்ராரியோ முழுவதும் விசேட முடக்கல் அறிவுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வீடுகளில் நடைபெறுகின்ற விசேட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அதன்போது பெற்றோர் பிள்ளையினது பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், பிள்ளைகளின் கற்கைகளுக்கான வசதிகளை பெற்றோர்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது