பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.
வாடிவாசலில் சீறிப் பாய காத்திருக்கும் 783 காளைகளை அடக்குவதற்கு 649 மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்வையாளர்களுக்கு இருபுறமும் வேலிகள் அமைத்து காளைகள் உள்ளே நுழையாமல் இருக்க பாதுகாப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படவுள்ளது. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது