உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு நடைபெற்று வருவதாக பொதுசுகாதார தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
புதிய வகை வைரஸினை கட்டுப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் இன்னமும் உலகளவில் ஆராய்வுகள் நடைபெற்று வருவாகவும் அவர் கூறினார்.
மேலும், கனடாவிற்குள் பிரவேசிப்பவர்கள் மூலமே புதிய வகை வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது என்பதும் உறுதியாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
கனடாவில் ஒன்று மேற்பட்ட தடவைகள் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் தொடர்பிலும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.