அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் பெண் கைதியொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
52 வயதான லிசா மாண்ட்கோமெரி (Lisa Montgomery) என்ற குற்றவாளிக்கு இன்டியானாவின் உள்ள பெடரல் சிறை வளாகத்தில் நீதிமன்ற உத்தரவின் கீழ் விஷ ஊசி ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.