மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில், தைப்பொங்கல் நாளான நேற்றுமாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களில், ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எருவில் பகுதியிலிருந்து களுதாவளை நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, பொருட்களை வாங்குவதற்கான கூடி நின்ற, 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேவேளை, களுதாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவரும், பட்டிருப்பு உள்வீதி சந்தியில் இடம்பெற்ற மற்றொரு விபத்துச் சம்பவத்தில் மூவரும், களுதாவளை கடற்கரை வீதியில், முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.