கொரோனா தாக்கம் காரணமாக அடுத்த பத்து தினங்களுக்குள் 2ஆயிரம் பேர் வரையில் மரணிக்கலாம் என்று பொதுச்சுகாதார துறையின் தலைமை வைத்தியர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆகக்குறைந்தது ஒரு இலட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்றையதினம் முதிய வரைமுறைகளை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தற்போதைய நிலையில் புதிய விதிகளை பின்பற்றாதவிடத்து நாளொன்றுக்கான தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 7ஆயிரத்து 900 இலிருந்து 13ஆயிரமாக உயர்வடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் கொரோனா பரவலை தடுப்பதற்கு சில மாகாணங்கள் எடுத்துள்ள இறுக்கமான நடவடிக்கைகள் தவிர்க்கப்படும் பட்சத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் தொற்றாளர்களை நாடாளவிய ரீதியில் அடையாளம் காணும் நிலைமைகள் உருவாகியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.