உலக பிரசித்தி பெற்ற அலங்கார நல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது.
இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்றிருப்பதாகவும் போட்டியில் பங்கேற்பதற்காக காளை உரிமையாளர்கள் நேற்று மாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.