இந்தியாவின் பொறுமையை சோதனை செய்து யாரும் தவறு செய்ய வேண்டாம் என இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் நரவானே தெரிவித்துள்ளார்.
இராணுவ தினத்தை முன்னிட்டு நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு அவர் பேசிய அவர்,
“எல்லை பகுதியில் தன்னிச்சையாக மாற்றம் ஏற்படுத்த சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதிபூண்டுள்ளோம்.
அதேநேரத்தில், இந்தியாவின் பொறுமையை சோதித்து தவறை செய்ய வேண்டாம்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்த இந்திய இராணுவம் அனுமதிக்காது ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.