கனடாவில் 2020ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி நிலவரப்படி, 38 மில்லியன் 5 ஆயிரத்து 238 பேர் வசிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 4 இலட்சத்து 11 ஆயிரத்து 854ஆக அதிகரித்துள்ளது.
2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மக்கள்தொகை வளர்ச்சி கிட்டத்தட்ட 5 இலட்சத்து 30 ஆயிரமாக இருந்தது. இந்தப் புதிய எண்ணிக்கை கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சி 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மிகக் குறைவாகும்.
பிறப்பு மற்றும் இறப்புகளின் மாறுபாடான இயற்கை அதிகரிப்பு, 2019ஆம் மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு இடையில் 74 ஆயிரத்து 571 அதிகரித்துள்ளது.
இதனிடையே, கனடாவின் மக்கள் தொகை 2068ஆம் ஆண்டுக்குள் 70 மில்லியனை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.