சீனாவில், ஹெய்லோங்ஜியாங் (Heilongjiang) மாகாணத்தில் , திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஹெய்லோங்ஜியாங் (Heilongjiang) மாகாணத்தில், புதன்கிழமை மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 12 பேருக்கு எவ்வித அறிகுறியும் இருக்காத நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனையடுத்தே மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் அவசர நிலையினால், மாகாணத்தில் உள்ள 37 மில்லியன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.